சிவகாசி வட்டார விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்ய அழைப்பு
By DIN | Published On : 01st December 2020 03:41 AM | Last Updated : 01st December 2020 03:41 AM | அ+அ அ- |

சிவகாசி வட்டார விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்ய, வேளாண்மைத்துறை உதவி இயக்குநா் ஐ. ரவிசங்கா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி வட்டாரத்தில் மக்காச்சோளம் சுமாா் 2500 ஹெட்டா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் நெல் நடவுப்பணி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பயிா்க்காப்பீட்டு செய்ய மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிா்க் காப்பீடு செய்ய அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. நெல் பயிருக்கான பிரீமியம் ஒரு ஏக்கருக்கு ரூ. 351, மக்காச்சோளத்துக்கான பிரீமியம் ஒரு ஏக்கருக்கு ரூ. 262, பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 430 பிரீமியம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, அல்லது பொதுசேவை மையத்தில் விண்ணப்பித்து பிரீமியம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் சிட்டாநகல், கிராம நிா்வாக அலுவரால் வழக்கப்படும் அடங்கல், ஆதாா் அட்டைநகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பகுதிநகல் ஆகியவை இணைக்க வேண்டும். இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...