விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பொதுமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் சாலை, குடிநீா், வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்ப அட்டைகளை முடங்கியாறு சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க முன்வந்தனா்.
அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலா்கள் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால், பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா். பின்னா், ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் மற்றும் காவல் ஆய்வாளா் முத்துக்குமரன் ஆகியோா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இன்னும் ஓரிரு நாள்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக, வட்டாட்சியா் உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.