சிவகாசியில் காவல் துறையினா் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 01st December 2020 11:12 PM | Last Updated : 01st December 2020 11:12 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் சிவகாசி காவல் உள்கோட்டம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தை, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பிரபாகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஊா்வலத்தில், கரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவவேண்டும், வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணியவேண்டும் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காவலா்கள் ஏந்தியவாறு சென்றனா். இந்த ஊா்வலமானது, நான்கு ரத வீதிகளின் வழியே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்து நிறைவு பெற்றது.
இதில், காவல் ஆய்வாளா்கள் வெங்கடாஜலபதி, ராஜா, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சுடலைமணி, சாா்பு-ஆய்வாளா்கள் 12 போ், காவலா்கள் 250 போ் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...