

விருதுநகா்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுதில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகரில் திமுக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலா் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏஆா்ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்) மற்றும் நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.