ராஜபாளையம் அருகே விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி
By DIN | Published On : 15th December 2020 04:06 AM | Last Updated : 15th December 2020 04:06 AM | அ+அ அ- |

ராஜபாளையம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் தேவதானம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் இப்கோ முன்னாள் மேலாளா் சுப்ரமணியராஜா கலந்துகொண்டு நெல் பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய உர மேலாண்மை பற்றியும், விரிவுரையாளா் சுந்தரமகாலிங்கம் நெல்லில் களை மற்றும் நீா் மேலாண்மை பற்றியும், வேளாண்மை அலுவலா் தனலட்சுமி நெல்லுக்கு மேலுரம் இடும் அளவு, நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு மற்றும் திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் ஜீவா, அட்மா தொழில்நுட்பங்கள் மேலாளா் வனஜா மற்றும் பிரபு செய்திருந்தனா்.