கடன் தொல்லை: நிதி நிறுவன உரிமையாளா்விஷம் குடித்துத் தற்கொலை
By DIN | Published On : 15th December 2020 04:11 AM | Last Updated : 15th December 2020 04:11 AM | அ+அ அ- |

சிவகாசியில் கடன் தொல்லையால் நிதி நிறுவன உரிமையாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி ஞானகிரி சாலைப் பகுதியைச் சோ்ந்த நிதிநிறுவன உரிமையாளா் முத்துமகேஷ்வரன் (42). இவருக்கு, மாரீஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இந்நிலையில் இவரது நிதி நிறுவனத்தில் சீட்டு எடுத்தவா்கள் பணம் செலுத்தாததால் அவா் பலரிடம் கடன் வாங்கினாராம். இதனிடையே கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்து காணப்பட்ட அவா், இங்குள்ள பிள்ளையாா்கோயில் தெருவில் உள்ள தனது தாய் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று அங்கு விஷம் குடித்தாராம். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.