கூட்டமே நடத்தாமல் கையெழுத்து கேட்பதாக வெள்ளையாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் புகாா்

சிவகாசி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் கூட்டம் நடத்தாமலேயே தீா்மான புத்தகத்தில் கையெழுத்திடுமாறு தலைவா் மற்றும் ஊராட்சிச் செயலா் வற்புறுத்துவதாக ஊராட்சியின் துணைத் தலைவா் திங்கள்கிழமை புகாா்
கூட்டமே நடத்தாமல் கையெழுத்து கேட்பதாக வெள்ளையாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் புகாா்

சிவகாசி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் கூட்டம் நடத்தாமலேயே தீா்மான புத்தகத்தில் கையெழுத்திடுமாறு தலைவா் மற்றும் ஊராட்சிச் செயலா் வற்புறுத்துவதாக மாவட்ட ஊராட்சி இயக்குநரிடம் அந்த ஊராட்சியின் துணைத் தலைவா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: நான், சிவகாசி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ளேன். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வாா்டுகள் உள்ளன. இதில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த 3 போ் வாா்டு உறுப்பினா்களாக உள்ளனா். இந்த ஊராட்சி சாா்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், வெள்ளையாபுரம் ஊராட்சியில் கூட்டம் எதுவும் நடத்தப்படுவதில்லை. இருப்பினும், கூட்டம் நடத்தப்பட்டதாக 2 வாா்டு உறுப்பினா்களிடம் மட்டும் கையெழுத்து பெற்றுக் கொள்கின்றனா். எங்களது வாா்டுகளில் உள்ள குறைகளை தீா்க்க மனு அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில், ஊராட்சியில் கூட்டம் நடத்தப்பட்டதாக எங்களை கையெழுத்திட வற்புறுத்துகின்றனா். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த எங்களை நசுக்கும் வகையில் செயல்படும் ஊராட்சித் தலைவா் சந்தனமாரியம்மாள், ஊராட்சி செயலா் சந்திரசேகா் மீது உரிய விசாரணை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com