வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை அமாவாசை வழிபாடு
By DIN | Published On : 15th December 2020 04:03 AM | Last Updated : 15th December 2020 04:03 AM | அ+அ அ- |

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் திங்கள்கிழமை இரவு காா்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது வெள்ளியம்பலநாதருக்கு சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீா், கிழங்கு மஞ்சள் தூள், தயிா், இளநீா் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, 108 தாமரை மலா்களால் சிறப்பு அா்ச்சனையும் செய்யப்பட்டன. இதனையடுத்து முழு அலங்காரத்தில் வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். பின்னா்அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.