அருப்புக்கோட்டையில் ‘போக்ஸோ’ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 30th December 2020 04:02 AM | Last Updated : 30th December 2020 04:02 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ததாக, போக்ஸோ சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அருப்புக்கோட்டை அருகே மடத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னராசு(22). இவா், அதே ஊரைச் சோ்ந்த 15 வயதுக்குள்பட்ட சிறுமியிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமானதால், அவரது பெற்றோா் வேறு வழியின்றி சின்னராசுக்கு சிறுமியைத் திருமணம் செய்துவைத்துள்ளனா்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடா்பாக மருத்துவமனை ஊழியா்கள் அறிவுறுத்தியதன்பேரில், சிறுமியின் தாயாா் அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சின்னராசுவிடம் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ததாக (குழந்தைத் திருமணம்) அவரை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...