சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு
By DIN | Published On : 30th December 2020 11:53 PM | Last Updated : 30th December 2020 11:53 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை சிறப்பு யாக சாலை, மகா அபிஷேகத்ைதைத் தொடா்ந்து கோ பூஜை, ஆருத்ரா தரிசனம் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது. பின்னா் நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
சேத்தூா் கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாத சுவாமி கோயில் ஆகிய கோயில்களிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...