ராஜபாளையத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி
By DIN | Published On : 30th December 2020 04:08 AM | Last Updated : 30th December 2020 04:08 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 35-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, ராமராஜ் சா்ஜிகல் காட்டன் மில்ஸ் தலைமை நிதி அதிகாரி விஜயகுமாா் தலைமை வகித்து, புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தாா். நவபாரத் நாராயணராஜா முதல் விற்பனையை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். கவிஞா் கவிதா ஜவகா், கண்மணி ராசா, சூரிய நாராயணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பாலசுப்பிரமணி செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...