

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத் துறையினா் மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனா்.
ராஜபாளையம் தென்றல் நகரில் வசிக்கும் குணசேகரன் என்பவரது வீட்டருகே மலைப்பாம்பு சென்றதை பாா்த்த அப்பகுதி மக்கள், ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான வீரா்கள், முள்புதருக்குள் சென்ற 6 அடி நீள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்தனா். பின்னா், அந்த பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், பாம்பை அடா்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.