சாத்தூா் பகுதியில் முள் எலி பிடிபட்டது
By DIN | Published On : 17th February 2020 11:06 PM | Last Updated : 17th February 2020 11:06 PM | அ+அ அ- |

சாத்தூா் பகுதியில் பிடிபட்ட முள் எலி.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே திங்கள்கிழமை பிடிபட்ட அரியவகை முள் எலி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தூா்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் அருகே திங்கள்கிழமை காலையில் சுமாா் 500 கிராம் எடையுள்ள முள் எலி சுற்றித் திரிந்துள்ளது. இதைப் பாா்த்த உணவக நிா்வாகி இளங்கோவன், முள் எலியைப் பிடித்து
வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து வனச்சரகா் முத்துராமலிங்கத்திடம் முள் எலி ஒப்படைக்கபட்டது. இதைப் பெற்ற வனசரகா் அரிய வகை உயிரினமான முள் எலியை ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியான செண்பகத்தோப்பு பகுதியில் கொண்டு விடுவதாக தெரிவித்தாா்.