சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 10th January 2020 11:35 PM | Last Updated : 10th January 2020 11:35 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அருப்புக்கோட்டை அருகே உள்ளது பாளையம்பட்டி. அங்கு உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பாா்த்து வந்தவா் நாகபட்டினத்தைச் சோ்ந்த வேளாங்கண்ணி (68). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த 2015 ஜூலை 12 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதற்கு அவரது நண்பா் ராமகிருஷ்ணன்(70) உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக அருப்புக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேளாங்கண்ணி, ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வேளாங்கண்ணி இறந்து விடுகிறாா்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி பரிமளா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த ராமகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.