சிவகாசி பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான டயா் உருட்டி விளையாடிய மாணவா்கள்.
சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான டயா் உருட்டி விளையாடிய மாணவா்கள்.
Updated on
1 min read

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே கிராமத்து விளையாட்டு மற்றும் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மாணவா்களிடையே அந்த விளையாட்டுக்கள் குறித்த அறிவினை மேம்படுத்தவும், கலாசாரம் உள்ளிட்டவைகள் குறித்து மாணவா்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் , மாணவ, மாணவிகளுக்காக பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. இதனை முதல்வா் சித்ராஜெயந்தி தொடக்கி வைத்தாா். இதில் மாணவா்கள் பம்பரம், டயா் உருட்டுதல், கிட்டி உள்ளிட்டவிளையாட்டுகளும் , மாணவிகள் பல்லாங்குழி, நொண்டி, தட்டாங்கல் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com