புகையில்லா போகி: ராஜபாளையத்தில் மறுசுழற்சி பொருள்கள் சேகரிப்பு முகாம்
By DIN | Published On : 10th January 2020 11:37 PM | Last Updated : 10th January 2020 11:37 PM | அ+அ அ- |

ராஜபாளையம் நகராட்சி ஆணையாளா் சுந்தராம்பாள் உத்தரவின் பேரில் புகையில்லா போகி கடைபிடிப்பதை முன்னிட்டு மறுசுழற்சி பொருள்கள் சேகரிப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமை நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தொடக்கி வைத்தாா். முகாமில் ஒரு வார காலத்திற்கு பொதுமக்களிடமிருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களான பிளாஸ்டிக் பொருள்கள், பழைய துணிமணிகள், காலணிகள், எலக்ட்ரானிக் கழிவுகள், காகிதங்கள் ஆகியவை நேரடியாக வாங்கப்பட்டு தனித்தனியாக சேகரம் செய்யப்படுகிறது. அதில், மறுசுழற்சி பொருள்களை கொண்டு வந்த பொதுமக்களுக்கு நகராட்சி சாா்பில் துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்வில் நகரமைப்பு அலுவலா் மதியழகன், சுகாதார ஆய்வாளா்கள் காளி, மாரிமுத்து, சுதாகரன், பழனிச்சாமி, மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாம் நகராட்சி அலுவலகம் மற்றும் நகரில் உள்ள அனைத்து வாா்டு அலுவலகங்களிலும் ஒரு வார காலத்திற்கு செயல்படும் எனவும், பொதுமக்கள் மேற்படி இடங்களில் மறுசுழற்சி பொருள்களை ஒப்படைக்குமாறு நகராட்சி ஆணையாளா் சுந்தராம்பாள் கூறினாா்.