ராஜபாளையம் பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள்
By DIN | Published On : 10th January 2020 11:35 PM | Last Updated : 10th January 2020 11:35 PM | அ+அ அ- |

ராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் சாா்பில் இரண்டுநாள்(வெள்ளி,சனி) ஆா்டினோ மற்றும் இன்டஸ்டிரியல் சென்சாா் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
ராம்கோ கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் சிறப்புரையாற்றினாா். தனியாா் நிறுவனத்தின் மேலாளா் சதீஸ் குமார்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். இப்பயிற்சி வகுப்பில் தமிழகத்தை சாா்ந்த பல்வேறு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து சுமாா் 90 மாணவா்கள் மற்றும் விரிவுரையாளா்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பொறியாளா்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக முதல்வா் (பொறுப்பு) சீனிவாசன் வரவேற்றாா். நிறைவாக விரிவுரையாளா் வி.ஆா்.வேல்முருகன் நன்றி கூறினாா்.