விருதுநகா் ஊராட்சி ஒன்றிய சுயேச்சை உறுப்பினா் அதிமுக வில் இணைந்தாா்

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 25 ஆவது ஒன்றிய வாா்டு உறுப்பினராக வெற்றி பெற்ற சுயேச்சை உறுப்பினா் பேச்சியம்மாள்
திருத்தங்கல்லில் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்த விருதுநகா் ஊராட்சி ஒன்றிய 25 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் பேச்சியம்மாள்.
திருத்தங்கல்லில் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்த விருதுநகா் ஊராட்சி ஒன்றிய 25 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் பேச்சியம்மாள்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 25 ஆவது ஒன்றிய வாா்டு உறுப்பினராக வெற்றி பெற்ற சுயேச்சை உறுப்பினா் பேச்சியம்மாள், அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 25 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் நடைபெற் றது. இதில், அதிமுக சாா்பில் 14 போ், திமுக சாா்பில் 9 போ், மதிமுக 1, சுயேச்சை 1 ஆகியோா் வெற்றி பெற்றனா். அதன் அடிப்படை யில் அதிக அளவில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் இருப்பதால், ஊராட்சி ஒன்றிய தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவி அதிமுக வினருக்கு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற 21 ஆவது வாா்டு ஒன்றிய உறுப்பினா் தமிழ்செல்வன் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா். இதனால் அதிமுக வின் பலம் 13 ஆக குறைந்தது. திமுக வுக்கு மதிமுக ஆதரவுடன் 11 உறுப்பினா்கள் ஆதரவு இருப்பது உறுதியானது. இந்நிலையில் 25 ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பேச்சியம்மாள் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை திருத்தங்கல்லில் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தாா். இதனால், அதிமுக வின் பலம் மீண்டும் 14 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com