சிவகாசி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 11th July 2020 08:07 AM | Last Updated : 11th July 2020 08:07 AM | அ+அ அ- |

சிவகாசி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.
சிவகாசி வட்டத்தில் கிராம நிா்வாக அலுவலருக்கும், வட்டாட்சியா் அலுவலக ஊழியா் ஒருவருக்கும் கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 49 ஊழியா்களுக்கு சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதன் மூடிவு சில நாள்களில் வரும் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.