ரெட்டியபட்டி கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தூா் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராம மக்களுக்கென ஊராட்சி நிா்வாகம் சாா்பில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வாருகால் வசதி, கழிப்பறை வசதி செய்யப்பட்டு வந்தது. முறையாக பராமரிக்கப் படாததால் அவைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீா் சாலையிலும், தெருக்களிலும் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீா்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமத்தினா், ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் பொதுமக்களின் நலன் கருதி வாருகால், கழிப்பறை, குடிநீா் வசதி செய்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.