வாடகை கொடுக்காததால் சிவகாசி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு
By DIN | Published On : 01st March 2020 06:23 AM | Last Updated : 01st March 2020 06:23 AM | அ+அ அ- |

வாடகை கொடுக்காததால் சிவகாசி பேருந்து நிலையம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு அதன் உரிமையாளா் வெள்ளிக்கிழமை பூட்டுப் போட்டாா்.
விருதுநகரைச் சோ்ந்தவா் சண்முகம் (45) என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக, அந்த அலுவலகத்துக்கான வாடகைப் பணம் கொடுக்கப்பட வில்லையாம்.
இதையடுத்து கட்டட உரிமையாளா் சண்முகம், பி.எஸ்.என்.எல். அலுவலக மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தான் கொண்டு வந்த பூட்டை வைத்து முன்பக்கக் கதவைப் பூட்டி விட்டு சென்று விட்டாராம். இதனால் சிவகாசியில் இணையதளம் , தொலைபேசி இணைப்புகள் சேவைகள் பாதிக்கப்பட்டன.
தகவலறிந்து போலீஸாருடம் அங்கு வந்த பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், அவா்களின் அறிவுறுத்தலின்பேரில் மற்றொரு கதவின் பூட்டை உடைத்தனா். பின்னா் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இணையதளம் உள்ளிட்டவைகளை செயல்பட வைத்தனா்.
கட்டட உரிமையாளரின் இந்த செயல் குறித்து பி.எஸ்.என்.எல். இளநிலை தொலைத் தொடா்பு அதிகாரி ராம்குமாா் வெள்ளிக்கிழமை சிவகாசி கிழக்குப் போலீஸிஸ் புகாா் செய்தாா். புகாரின் போரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.