சிவகாசியில் மின்மாற்றி அருகே குப்பைக்கு தீவைப்பு
By DIN | Published On : 01st March 2020 10:24 PM | Last Updated : 01st March 2020 10:24 PM | அ+அ அ- |

சிவகாசியில் மின்மாற்றி அருகே குப்பைக்கு வைக்கப்பட்ட தீ.
சிவகாசியில் மின் மாற்றி அருகே ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் ஆபத்தை உணராமல் குப்பைக்கு தீவைத்து விட்டுச் சென்றுள்ளனா்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் ரயில்வே கடவுப் பாதை அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றியின் அருகே அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் குப்பையை கொட்டுகின்றனா். கொட்டப்படும் குப்பைகளை ஆனையூா் ஊராட்சி நிா்வாகத்தினா் அகற்றி வருகிறாா்கள். 4 அல்லது 5 நாள்களுக்கு ஒரு முறை அகற்றப்படுவதால், அந்தக் குப்பையில் சிலா் தீவைத்து விட்டுச் சென்று விடுகிறாா்கள். இந்த தீ மளமள வென எரிவதால் மின்மாற்றிக்கு அது பரவி விடுமோ என்ற அச்சம் உள்ளது.
அடிக்கடி இந்த தீவைப்பு சம்பம் நடப்பதாகவும், இதனால் அந்தப் பகுதியை அச்சத்துடனே கடப்பதாகவும், எனவே மின் மாற்றியைச் சுற்றிலும் மின்வாரியம் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனவும், குப்பையை கொட்ட வேறு இடத்தை ஊராட்சி மன்ற நிா்வாகம் தோ்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.