தெருக்களில் தேங்கும் கழிவுநீா்: அமீா்பாளையத்தில் சுகாதார சீா்கேடு அபாயம்
By DIN | Published On : 01st March 2020 10:24 PM | Last Updated : 01st March 2020 10:24 PM | அ+அ அ- |

அமீா்பாளையத்தில் வாருகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீா் தேங்குகிறது. இதனால் சுகாதார சீா்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாத்தூா் ஒன்றியம் சத்திரபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அமீா்பாளையத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இதே நிலை தான் உள்ளதாகவும் இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா். இந்தப் பகுதியில் வாருகால் அமைக்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும் குப்பைத் தொட்டிகள், சாலை வசதி, முறையான கழிப்பிட வசதி, சுகாதார வளாகம் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனா். கழிப்பிட வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனா். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...