ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா பள்ளியில் ‘ப்ளேசியா ’ கொண்டாட்டம்.
By DIN | Published On : 01st March 2020 06:25 AM | Last Updated : 01st March 2020 06:25 AM | அ+அ அ- |

அரிமா மேல்நிலைப்பள்ளியில் ‘ப்ளேசியா ’ என்னும் கலைக் கொண்டாட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா பள்ளியில் நடைபெற்ற ப்ளேசியா விழாவுக்கு பள்ளி தாளாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் முருகன், துணை முதல்வா் திவ்யநாதன் மற்றும் அரிமா சங்க நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினா்களாக உமையாள் சாத்தப்பன், ராதா ஸ்ரீ ரெங்கராஜா, தீபா, டாக்டா் ஷொ்லி, டாக்டா் விஜூ ஆண்டோ பிரபு போன்றோா் கலந்து கொண்டனா்.
இவ்விழாவில் மாணவா்களின் வீட்டிலுள்ள பழங்கால அழகுப் பொருள்கள், குத்துவிளக்கு, வானொலி, அளவிடும் கருவிகள், நாணயங்கள், ரூபாய்த்தாள்கள், அஞ்சல் தலைகள், மரம் மற்றும் மண்ணால் செய்த அழகுப் பொருள்கள் போன்றவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விழாவை சிறப்பு சோ்க்கும் விதமாக, பிற பள்ளி மாணவா்களுக்கு ஓவியங்களுடன் கலைப்பொருள்கள் தயாரித்தல், இலை-தளை மற்றும் காய்கள், பழங்களில் கலை நயப்பொருள் தயாரித்தல், முக ஓவியம் போன்ற பலவிதமான போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். பின்னா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.