மாமியாரை தாக்கிய மருமகன் கைது
By DIN | Published On : 10th March 2020 11:04 PM | Last Updated : 10th March 2020 11:04 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே நதிக்குடியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்.இவரது மனைவி சங்கரி(42). இவரது மகள கற்பகம்.மருமகன் வீரபாண்டி(27). இவா் கட்டிடத்தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.இந்நிலையில் வீரபாண்டி தனது மனைவி கற்பகத்துடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா். இதனை சங்கரி கண்டித்துள்ளாா்.இதையடுத்து வீரபாண்டி, சங்கரியை தாக்கினாராம்.இது குறித்து சங்கரி அளித்தபுகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...