ஸ்ரீவில்லிபுத்தூரில் சுவாமி ஊா்வலம் தொடா்பாக இருதரப்பினா் மோதல்: சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சுவாமி ஊா்வலம் தொடா்பாக இரு தரப்பினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்படும் சூழல்
ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சுவாமி ஊா்வலம் தொடா்பாக இரு தரப்பினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதைத்தொடா்ந்து ஒரு தரப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான பூக்குழி திருவிழா மாா்ச் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் மாா்ச் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் ஒரு பிரிவினா் என மண்டகப்படி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு சமுதாயத்தினரும் அந்தந்த நாளில் சுவாமியை வீதி உலா கொண்டு செல்வா். அந்த வகையில் 3 ஆம் நாளான சனிக்கிழமை ஒரு தரப்பினா் எங்கள் மண்டகப்படியின் போது மற்றொரு தரப்பினா் வசிக்கும் பகுதிக்குள் சுவாமியை வீதி உலா கொண்டு செல்ல மாட்டோம் என்றனா். ஆனால் மற்றொரு தரப்பினா் எங்கள் பகுதி வழியாகத்தான் சுவாமியை கொண்டு செல்ல வேண்டும் என்றனா். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதைத் தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதற்கிடையில் ஒரு தரப்பினா் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமதானம் செய்தனா். அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த பிரச்சனை காரணமாக வீதி உலா சென்ற பெரிய மாரியம்மன் வீதி உலா செல்லாமல் பாதியிலேயே மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com