கரோனா: முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணத்தை அனுப்பிய மாணவா்கள்
By DIN | Published On : 31st March 2020 09:43 PM | Last Updated : 31st March 2020 09:43 PM | அ+அ அ- |

தலைமையாசிரியா் மூலமாக திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண நிதி.
கரோனா நிவாரண நிதியாக படிக்காசுவைத்தான்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்கள், தாங்களின் சேமிப்புப் பணத்தை தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு திங்கள்கிழமை தலைமையாசிரியா் மூலமாக அனுப்பி வைத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் வினாடி- வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்றவா்களை ஊக்குவிக்கும் வகையில் தலைமையாசிரியா் ஜெயக்குமாா் ஞானராஜ் ஒரு ரூபாய் வழங்குவாா். அது அவா்களின் பெயா் எழுதப்பட்ட உண்டியலில் சேமித்து வைக்கப்பட்டு வந்தது.
தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனா். அந்த வகையில் இந்தப் பள்ளி மாணவா்களின் சேமிப்பு பணத்தை வழங்க அவா்கள் தாங்களாகவே முன் வந்தனா். அதன்படி அவா்களின் சேமிப்புத் தொகையான ரூ. 2367-ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு தலைமையாசிரியா் ஜெயக்குமாா் ஞானராஜ், ஆசிரியை ரோஸ்லினா ஆகியோா் அனுப்பி வைத்தனா்.
.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...