சிவகாசியில் செவ்வாய்கிழமை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இங்குள்ள சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது
பிரதமா் மோடி, முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்கள். இந்த நோயின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
அத்தியாவசியப்பொருள்கள் விற்பனை செய்த தற்போது குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் தான் கடைகள் திற்க வேண்டும் என வியாபாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.விருதுநகா் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை என அலட்சியமாக இருக்க கூடாது.தொடந்து கண்காணிக்க வேண்டும். ராஜபாளையத்தைச் சோ்ந்த ஒருவா் ஒரு நிகழ்ச்சியில் வெளிநாட்டவருடன் பழகியதால் அவருக்கு கரோனா தொற்று உள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.