அலைபேசியைத் தராத அக்கா: தங்கை தற்கொலை

சின்ன செட்டிக்குறிச்சி கிராமத்தில் அலைபேசி பயன்படுத்துவதில் அக்கா, தங்கை இடையே ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரமடைந்த தங்கை, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அலைபேசியைத் தராத அக்கா: தங்கை தற்கொலை


அருப்புக்கோட்டை: சின்ன செட்டிக்குறிச்சி கிராமத்தில் அலைபேசி பயன்படுத்துவதில் அக்கா, தங்கை இடையே ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரமடைந்த தங்கை, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்ன செட்டிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் முருகன் (45), ராமலட்சுமி (42). தம்பதியர் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களது இரு மகள்கள் கார்த்திகா (19) மற்றும் அபிநிக்கா (16). கார்த்திகா செவிலியர் படிப்பு முடித்துள்ளார். தங்கை அபிநிக்கா பத்தாம் வகுப்பு முடித்துள்ளார்.

அக்கா, தங்கை இருவரும் கரோனா சூழல் காரணமாக கடந்த பல மாதங்களாக வீட்டில் இருந்து வருகின்றனர். இதில் சகோதரிகள் இருவரும் அவர்களது வீட்டில் உள்ள ஒரே ஒரு அலைபேசியான தந்தையின் அலைபேசியில் முகநூல், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் ஆகிய சமூக ஊடகங்களில் பொழுதைக் கழிப்பதும் அதற்காகப் போட்டியிட்டு சண்டையிட்டுக் கொள்வதும் வழக்கமாம்.

இந்நிலையில் தீபாவளித் திருநாளான சனிக்கிழமை நண்பகலில் அலைபேசியைப் பயன்படுத்துவது தொடர்பாக சகோதரிகள் இருவருக்குமிடையே சண்டை எழுந்துள்ளது. அப்போது, தான் தற்கொலை செய்துவிடுவேன் என அபிநிக்கா மிரட்டியும் கார்த்திகா கண்டுகொள்ளவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமி அபிநிக்கா திடீரென யாரும் எதிர்பாரா வண்ணம் பருத்தி விவசாயத்திற்குப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்திருக்கிறார். உடனடியாக அவசர மீட்பு வாகனம் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அபிநிக்கா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதில் அபிநிக்கா சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு இறந்துவிட்டார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த பந்தல்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com