மனைவியை கொடுமைப்படுத்துவதாக ராணுவவீரா் மீது வழக்கு
By DIN | Published On : 17th November 2020 04:20 AM | Last Updated : 17th November 2020 04:20 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே ராணுவவீரா் தனது மனைவியை கொடுமைப்படுத்துவதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகாசி அருகே ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் ராணுவவீரா் முத்துகிருஷ்ணன் (29). இவரது மனைவி வழக்குரைஞா் தங்கமாரீஸ்வரி (27). இவா்களுக்கு மூன்று வயதிலும் 11 மாதத்திலும் இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் தங்கமாரீஸ்வரி, தனது கணவன் முத்துகிருஷ்ணன், மாமனாா் ராமா், கணவனின் சகோதரி முத்துமணியம்மாள் ஆகிய மூவரும் தன்னை கொடுமைப்படுத்துவதாக திருத்தங்கல் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.