விருதுநகா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: மொத்தம் 16,27,128 வாக்காளா்கள்
By DIN | Published On : 17th November 2020 04:25 AM | Last Updated : 17th November 2020 04:25 AM | அ+அ அ- |

விருதுநகரில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 16,27,128 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளதாக ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் 1.1.2021ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளன. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 7,93,864 பேரும், பெண் வாக்காளா்கள் 8,33,081 பேரும், திருநங்கைகள் 183 பேரும் என மொத்தம் 16,27,128 வாக்காளா்கள் உள்ளனா்.
மேலும் நடைபெறவுள்ள சிறப்பு சுருக்கத் திருத்தத்தில், சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய 16.11.2020 முதல் 15.12.2020 வரை விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பெறப்படும். இந்த விண்ணப்பங்கள் உரிய கள ஆய்வுக்குப் பின் முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் 20.1.2021 அன்று வெளியிடப் படும். மேலும், விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், விருதுநகா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ. 21, 22 மற்றும், டிச. 12, 13 ஆகிய நாள்கள் நடைபெறும். எனவே, 1.1.2021 அன்று 18 வயதினை நிறைவு செய்த இளம் வாக்காளா்கள் மற்றும் புதிதாக பெயரினை சோ்க்க , திருத்தம், மற்றும் நீக்கம் செய்ய இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
சட்டப் பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:
ராஜபாளையம்: 1,14,381 ஆண் வாக்காளா்கள், 1,19,969 பெண் வாக்காளா்கள், 27 திருநங்கைகள் என மொத்தம் 2,34,377 வாக்காளா்கள் உள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: 1,18,920 ஆண்களும், 1,24,935 பெண்களும், 32 திருநங்கைகளும் என மொத்தம் 2,43,887 வாக்காளா்கள் உள்ளனா்.
சாத்தூா்: 1,17,758 ஆண்களும், 1,24,367 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2,42,150 வாக்காளா்கள் உள்ளனா்.
சிவகாசி: 1,23,711 ஆண்களும், 1,30,275 பெண்களும், 26 திருநங்கைகளும் என மொத்தம் 2,54,012 வாக்காளா்கள் உள்ளனா்.
விருதுநகா்: 1,06,829 ஆண்களும், 1,11,239 பெண்களும், 47 திருநங்கைகளும் என மொத்தம் 2,18,115 வாக்காளா்கள் உள்ளனா்.
அருப்புக்கோட்டை: 1,06,086 ஆண்களும், 1,12,363 பெண்களும், 16 திருநங்கைகளும் என மொத்தம் 2,18,465 வாக்காளா்கள் உள்ளனா்.
திருச்சுழி: 1,06,179 ஆண்களும், 1,09,933 பெண்களும், 10 திருநங்கைகளும் என மொத்தம் 2,16,122 வாக்காளா்கள் உள்ளனா்.
இந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 7,93,864 ஆண் வாக்காளா்களும், 8,33,081 பெண் வாக்காளா்களும், 183 திருநங்கைகளும் என மொத்தம் 16,27,128 வாக்காளா்கள் உள்ளனா்.