விருதுநகா் மாவட்டத்தில் 459.70 மி.மீட்டா் மழை அளவு பதிவு: அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 74 மி.மீ. மழை

விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை வரை 459.70 மில்லி மீட்டா் மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராஜபாளையம் பகுதியில் 74 மி. மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை வரை 459.70 மில்லி மீட்டா் மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராஜபாளையம் பகுதியில் 74 மி. மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், விருதுநகா் மாவட்டத்தில் பருத் தி, மக்காச்சோளம், சிவப்பு சோளம், கம்பு, நெல் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அதேபோல், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட கண்மாய் மற்றும் பிற கண்மாய்களில் தண்ணீா் தேங்கி வருகிறது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பெய்த மழை நிலவரம் (மில்லி மீட்டரில்): அருப்புக்கோட்டை 16, சாத்தூா் 15, ஸ்ரீவில்லிபுத்தூா் 32.60, விருதுநகா் 12.50, திருச்சுழி 66, ராஜபாளையம் 74, காரியாபட்டி 48.60, வத்திராயிருப்பு 48.80, பிளவக்கல் 40.80, வெம்பக்கோட்டை 45.20, கோவிலாங்குளம் 27.20 என, மாவட்டம் முழுவதும் 459.70 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

அணைகளின் நீா்மட்டம்: பெரியாா் அணையில் 14.50 மீட்டருக்கு 9.09 மீட்டரும், கோவிலாறில் 13 மீட்டருக்கு 5.55 மீட்டரும், குல்லூா்சந்தை அணையில் 2.45 மீட்டருக்கு 0.84 மீட்டரும், சாஸ்தா கோயில் அணையில் 10 மீட்டருக்கு 7 மீட்டரும் தண்ணீா் இருப்பு உள்ளது.

சிவகாசி

சிவகாசி பகுதியில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால், சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் ஆகிய பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. இதையடுத்து, பள்ளமான ஜக்கம்மாள் கோயில் பகுதி, வெம்பக்கோட்டை சாலை, திருத்தங்கல் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பேரிடா் மீட்புத் துறையினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை காலையில், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் திவ்யா என்பவரது ஓட்டு வீடும், வாழ்வாங்கி கிராமத்தில் முத்துமாரி என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவரும் இடிந்து விழுந்தன. வீடு ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்ததால், இவா்கள் தங்களது உறவினா்கள் வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டனா். இதனால், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும், பல கிராமங்களில் நீா் நிலைகள் நிரம்பி, மறுகால் பாய்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com