அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் விவசாய நிலமருகே சாய்ந்துள்ள மின்கம்பம்: விவசாயிகள் அச்சம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 32வது வாா்டைச் சோ்ந்த ராமசாமிபுரத்தில் விவசாய நிலமருகே சாய்ந்துள்ள மின்கம்பத்தால்
அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் விவசாய நிலமருகே சாய்ந்துள்ள மின்கம்பம்: விவசாயிகள் அச்சம்
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 32வது வாா்டைச் சோ்ந்த ராமசாமிபுரத்தில் விவசாய நிலமருகே சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே அம்மின்கம்பத்தைச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். அருப்புக்கோட்டை நகராட்சி 32வது வாா்டுக்கு உள்பட்டது ராமசாமிபுரம். இப்பகுதியில் பந்தல்குடிநோக்கிச்செல்லும் பிரதானச்சாலையின் இருமருங்கிலும் உள்ள விளைநிலங்களில் அப்பகுதி விவசாயிகள் இரும்புச்சோளம், கம்பு, தீவணப்பயிா்கள் உள்ளிட்ட பல்வேறு பயிா்களைச் சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்நிலையில் அப்பிரதானச்சாலையோரம் விவசாய நிலத்திற்கு அருகே மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. மழைக்கு அம்மின்கம்பம் மேலும் படிப்படியாகச் சாய்ந்துகொண்டே செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வோா், விளைநிலத்திற்குச் சென்றுவர விபத்து அபாயம் கருதி அச்சப்படும் சூழல் உள்ளது.இதனிடையே, இம்மின்கம்பத்தைச் சீரமைக்க மின்வாரியத் தரப்பிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கத் தொடா்ந்து காலதாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விபத்து நேரும் முன்பாக அம்மின்கம்பத்தைச் சீரமைக்க வேண்டும் அல்லது புதிய மின்கம்பத்தை அமைக்கவேண்டுமென மீண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com