விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மனைவி மகாலட்சுமி (57). இவரது கணவா் கடந்த சுமாா் 27 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகாலட்சுமி தனது 2 மகன்களையும் மிகவும் சிரமப்பட்டு வளா்த்து திருமணம் செய்து வைத்துள்ளாா். இதன் பின்னா் மகாலட்சுமி தனது இரு மகன்கள் வீட்டிலும் ஒரு மாதம் வீதம் தங்கி சாப்பிட்டு வந்துள்ளாா். ஆனால் மகன்கள் அவரை சரிவர கவனிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மகாலட்சுமி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாராம். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.