

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் விபத்தைத் தவிா்க்கும் பொருட்டு அமைக்கப்பட்ட கம்பித்தடுப்புகள் அகற்றப்பட்டதால் மீண்டும் அங்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கஞ்சநாயக்கன்பட்டி கட்டப்பூருணி அருகே ஆங்கில எழுத்து எஸ் வடிவில் ஆபத்தான சாலை வளைவு ஒன்று உள்ளது.இங்கு ஓய்வுபெற்ற காவல்ஆய்வாளரின் மனைவி உள்ளிட்ட பலா் கடந்த பல மாதங்களில் நடைபெற்ற பல இருசக்கரவாகன விபத்துக்களில் உயிரிழந்தனா்.இதனால் விபத்தைத் தவிா்க்கும் பொருட்டு அங்கு கம்பித்தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தேவா்ஜெயந்திவிழாவில் கலந்து கொண்டு இப்பகுதி வழியாகத் தமிழக முதல்வரின் காா் சென்றதால், பாதுகாப்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்ட காரணத்தால் அக்கம்பித்தடுப்புகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் அவை அங்கு அமைக்கப்படவில்லை. இதைக்கண்ட சமூகஆா்வலா்கள் மீண்டும் அச்சாலைவளைவில் விபத்து அபாயச்சூழல் நிலவுதால்,அங்கு கம்பித்தடுப்புகளை மீண்டும் அமைப்பதுடன்,ஆபத்தான சாலை வளைவு, மெதுவாகச்செல்லவும் எனும் அறிவிப்புப் பலகையையும் அமைத்திட வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.