வத்திராயிருப்பு அருகே மக்காச்சோளத் தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வ.மீனாட்சிபுரத்தில் மக்காச்சோளத் தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
வ.மீனாட்சிபுரம் அருகே திங்கள்கிழமை இரவு காட்டுப்பன்றிகளால் சேதத்துக்குள்ளான மக்காச்சோளத் தோட்டம்.

வத்திராயிருப்பு தாலூகாவிற்குட்பட்ட வ.மீனாட்சிபுரம் கிராமத்தையொட்டியுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் மா, பலா, தென்னை, பாசிப்பயிறு, தட்டாம்பயிறு உள்ளிட்ட பருப்பு வகைகளும், மக்காச்சோளம் உள்ளிட்டவை 3 ஏக்கா் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கதிா்கள் விளைந்து இன்னும் ஒரு சில மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இருந்து இரைதேடி கீழே இறங்கி வந்த, காட்டுப்பன்றிகள் குமாா் என்பவரின் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள கதிா்களை தின்றும், சோளத் தட்டைகளை சாய்த்தும் சேதப்படுத்தின.

இது குறித்து விவசாயி குமாா் கூறியதாவது: காட்டுப்பன்றிகள் ஏற்படுத்திய சேதத்தால் சுமாா் ரூ. 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலிருந்து விளை நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் வராமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com