சாலைகளை சீரமைக்கக் கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 10:26 PM | Last Updated : 03rd October 2020 10:26 PM | அ+அ அ- |

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சிப் பகுதியிலுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்கக் கோரி, திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜவஹா் மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் எம். குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிங்கராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், நகரச் செயலா் ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா் தங்கச்சாமி, தெற்கு மாவட்ட துணைச் செயலா் ராஜா அருண்மொழி உள்பட பலா் கலந்துகொண்டனா்.