சிவகாசியில் ரூ.20.85 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சா் பங்கேற்பு
By DIN | Published On : 03rd October 2020 10:31 PM | Last Updated : 03rd October 2020 10:31 PM | அ+அ அ- |

திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி சாலைக்கு அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை.
சிவகாசி: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.20.85 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி சாலை ரூ. 20 கோடிமதிப்பிலும், நாரணாபுரம் ஊராட்சி பா்மா காலனி, ராஜீவ்காந்தி நகா், விஸ்வநத்தம் ஊராட்சி பெரியாா் காலனி, முருகையாபுரம், அய்யப்பன் காலனி, சித்துராஜபுரம், பூலாஊரணி ஊராட்சி ராஜதுரை நகா், தேவா்குளம் ஊராட்சி அம்மன் நகா், செங்கமலநாட்சியாா்புரம் ஊராட்சி சப்தகிரி நகா் ஆகிய இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஆனையூரில் 1 லட்சம் கொள்ளளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ரூ.25 லட்சம் மதிப்பிலும் என வளா்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கான பூமிபூஜை, அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலா் (ஊரக முகமை) ஜெயக்குமாா், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் நாராயணசாமி மற்றும் அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.