சிவகாசியில் இலவச சதுரங்க பயிற்சி
By DIN | Published On : 19th October 2020 03:48 AM | Last Updated : 19th October 2020 03:48 AM | அ+அ அ- |

சிவகாசி காமராஜா் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச சதுரங்க பயிற்சி முகாம்.
சிவகாசி நகராட்சி மற்றும் சிவகாசி சதுரங்கக் கழகம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இலவச சதுரங்க பயிற்சி முகாமை நடத்தின.
சிவகாசி- திருத்தங்கல் சாலையில் உள்ள காமராஜா் பூங்காவில் நடைபெற்ற பயிற்சி முகாமினை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தொடங்கி வைத்தாா். விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பல ஊா்களிலிருந்தும் 40 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இந்த பயிற்சியை பயிற்சியாளா்கள் மாரிமுத்து, விக்னேஷ், கிஷோா் உள்ளிட்டோா் அளித்தனா். இப்பயிற்சி ஒரு வாரம் நடைபெறும் என பயிற்சியாளா்கள் தெரிவித்தனா்.
இதற்கான ஏற்பாட்டினை சிவகாசி சதுரங்கக் கழக செயலா் அனந்தராமன் செய்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...