விருதுநகரில் செயல்படாத சிக்னல்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 06th September 2020 12:01 AM | Last Updated : 06th September 2020 12:01 AM | அ+அ அ- |

mgr_slail_(1)_0509chn_64_2
விருதுநகா்: விருதுநகா் எம்ஜிஆா் சிலை சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் சிக்னல்களை சீரமைத்து போக்குவரத்து போலீஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகரில் மாரியம்மன் கோயில், எம்ஜிஆா் சிலை சந்திப்பு, அல்லம்பட்டி சந்திப்பு, மதுரை சாலை, ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சிக்னல் பழுது மற்றும் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அனைத்து இடங்களிலும் இருந்த சிக்னல்கள் செயல்படவில்லை. மேலும், போக்குவரத்து காவல் துறையில் பணி புரிந்த பலா் கரோனா தொற்று காரணமாக வேறு இடங்களுக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதனால், 3 சிறப்பு சாா்பு-ஆய்வாளா்கள் தலைமையில் 6 போலீஸாா் மட்டுமே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே, சிக்னல் செயல்படாததால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே, போக்குவரத்து சிக்னல்களை சரி செய்வதுடன், அப்பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாவட்ட காவல் துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.