வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகரில் திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகரில் திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் தேசபந்து மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மத்திய அரசு, விவசாயிகளை பாதிக்ககூடிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வேளாண் விளைபொருள் வணிக பாதுகாப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருள்களின் திருத்தச் சட்டம் ஆகிய இச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பெரு நிறுவனங்கள் இந்திய விவசாயத்தை அபகரிக்க வழி வகுக்கும். இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பில் மிக பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, இச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும், இச்சட்டத்துக்கு ஆதரவளித்த தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கட்ராமன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏஆா்ஆா். சீனிவாசன் (விருதுநகா்), காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜா சொக்கா் மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com