அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

அருப்புக்கோட்டை அருகே இராமானுஜபுரம் 4 வழிச்சாலையில் நிலைதடுமாறிய சரக்கு வாகனம்  மழைநீர் ஓடைப்பாலத்தினுள் விழுந்து நொறுங்கியது.
அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் 4வழிச்சாலையில் நிலைதடுமாறி மழைநீர் ஓடைப்பாலத்தின் சுவரை உடைத்து விழுந்து நொறுங்கிய சரக்கு வாகனம்.
அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் 4வழிச்சாலையில் நிலைதடுமாறி மழைநீர் ஓடைப்பாலத்தின் சுவரை உடைத்து விழுந்து நொறுங்கிய சரக்கு வாகனம்.

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை அருகே இராமானுஜபுரம் 4 வழிச்சாலையில் நிலைதடுமாறிய சரக்கு வாகனம்  மழைநீர் ஓடைப்பாலத்தினுள் விழுந்து நொறுங்கியது. இதில் அவ்வாகனத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள்  காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்த சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்கள் 10 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடிக்குச் சென்று  அங்கு வாழைப்பழத் தார்களை தங்கள் ஊருக்கு வேறு இரு லாரிகளில் ஏற்றிவிட்ட பின்னர் தாங்கள் பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்த காலியான சரக்கு வாகனம் ஒன்றில் அவர்கள் 10 பேரும் ஏறி, திங்கள்கிழமை இரவு புறப்பட்டு மீண்டும் தங்களது தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிளம்பிவந்தனர்.

அவ்வாகனத்தை இசக்கிமுத்து(41) என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர்களது வாகனம் அருப்புக்கோட்டை வட்டம் இராமானுஜபுரம்  (மதுரை-தூத்துக்குடி இடையிலான) 4 வழிச்சாலையில்  வந்தபோது, திடீரென நிலைதடுமாறி, அச்சாலையின் குறுக்கே செல்லும் மழைநீர் ஓடைப்பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு ஓடையினுள் விழுந்து நொறுங்கியது.

இதில், ஓட்டுநருக்கு  சிறுகாயமேற்பட்டது.மற்ற 10 தொழிலாளர்களும் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர், அங்கு, காயம்பட்டவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி பெற்ற லிங்கதுரை, முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட 10 கூலித்தொழிலாளர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழங்குபதிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர், விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com