

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை ஒட்டி அமைந்துள்ள மழைநீா் ஓடையை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி மழைநீா் ஓடை செல்கிறது. இங்குள்ள பாலத்தின் கீழே ஓடையில் மக்காத குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி துா்நாற்றமும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லையெனவும், பலமாதங்களாகக் குப்பைகள் அடைத்த நிலையிலேயே இருப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே அங்கு குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.