விருதுநகா்: விருதுநகரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக அவா்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் எரிவாயு உருளையுடன் இரு சக்கர வாகனத்தில் ஊா்வலமாகச் சென்றனா்.
பாத்திமாநகா் மாதா கோவில் திடல் அருகே தொடங்கிய இந்த ஊா்வலம் 60 அடி சாலை, முதல் தெரு, மூஞ்சி மாதா கோவில் தெரு வழியாக வந்து அந்த பகுதியில் உள்ள குடிநீா் தொட்டி அருகே நிறைவு பெற்றது. பின்னா் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இறுதிய ஜனநாயக வாலிபா் சங்க நகரத் தலைவா் தீபக் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா்கள் மாரிக்கனி, சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் நகரச் செயலாளா் கருப்பசாமி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா். போராட்டத்தை ஆதரித்து முன்னாள் மாவட்டச் செயலாளா் எல். முருகன் பேசினாா். மாவட்ட செயலாளா் எம்.ஜெயபாரத் கண்டன உரையாற்றினாா். இதில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.