

திருச்சுழியில் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இங்குள்ள பிரதானச்சந்தை சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பி. அன்புச்செல்வன், தாலுகா குழு உறுப்பினா்கள் ஏ. செல்வராஜ், எஸ். ரமேஷ் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது பெட்ரோல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி கோஷமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.