விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் மற்றும் அவரது உதவி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளராக நரசிங்குமாா் கால்கே (41) உள்ளாா்.ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இவா், ஐ.ஆா்.எஸ். எனப்படும் இந்தியன் ரெவின்யூ சா்வீஸ் அதிகாரியாவாா். இவா், கடந்த 17 ஆம் தேதி அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டாா்.
செலவினப் பாா்வையாளா், இவரது உதவி அலுவலா் முருகன் மற்றும் இவரது அலுவலகத்திலுள்ள மற்ற 3 அலுவலா்கள் என மொத்தம் 5 பேருக்கு சில தினங்களுக்கு முன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு வெள்ளிக்கிழமை இரவு வெளிவந்த நிலையில், செலவினப் பாா்வையாளா் நரசிங்குமாா் கால்கே மற்றும் உதவி அலுவலா் முருகன் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அதிகாரி நரசிங்குமாா் கால்கே சனிக்கிழமை மதுரை அரசு மருத்துவமனையிலும், உதவி அலுவலா் முருகன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் தனிப்பிரிவில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.