

பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சரஸ்வதி பூஜையுடன் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை வழிபாடுகளுடன் உலக நன்மை வேண்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
பந்தல்குடி அருகே செட்டிப்பட்டியில் உள்ள அன்பு மாடல் நகரில் அருள்மிகு ஸ்ரீசீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையையொட்டி கோவில் வளாகத்தில் பல ஆயிரம் வண்ணவண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள்,மற்றும் அழகிய கோலங்களும் இட்டு அழகூட்டப்பட்டிருந்தன.
அதேபோல வழிபாட்டின் முன்பாகவே சாய்பாபாவின் திருஉருவச்சிலைக்கு முன்புள்ள நந்திதேவர் மற்றும் உற்சவர் ஆகியோரைச் சுற்றிலும் அழகிய வண்ணவண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது.அப்போது ,வழிபாட்டில்,முதலாவதாக சரஸ்வதி,லஷ்மி,பார்வதியாகிய துர்கை என தேவியரின் 3 வடிவங்களுக்கும் சிறப்பு பாரம்பரிய மந்திர வழிபாடுகள் சுமார் அரைமணி நேரம் நடைபெற்றன.
அத்துடன் அங்கு அமைக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக வழிபாட்டில் இருந்த விதவிதமான கொலு பொம்மைகளுக்கும் அவற்றில் நடுநாயகமாக அமைந்த சரஸ்வதி,லஷ்மி,மற்றும் பார்வதி,துர்கை தெய்வ உருவபொம்மைகளுக்கும் சிறப்பு தீப,தூப ஆரத்தி நடைபெற்றது.
அதையடுத்து அருள்மிகு ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கும் வழிபாட்டுப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்க சிறப்பு தீப,தூப ஆராதனைகளும்,ஏக தீப,பஞ்ச தீப ஆராதனைகளும் நடைபெற்றன.வழிபாட்டு முடிவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகியான மனிதத்தேனீ ஏற்பாடு செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.