விருதுநகரில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்

​விருதுநகரில் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
விருதுநகரில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்
Updated on
1 min read


விருதுநகரில் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு துறை அலுவலர்கள் 463 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாட்டின் 75 வது வைர விழா சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னெச்சரிக்கையோடு விருதுநகர் மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திரத்தை மீண்டும் பறைசாற்றும் வண்ணம் வண்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் ஆட்சியர் பறக்க விட்டார். 

கரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட 21 துறைகளைச் சேர்ந்த 463 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தேசபக்தி மிகுந்த நடனம், நாடகம், குழு பாடல் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com