ஸ்ரீவில்லிபுத்தூா் திருப்பாற்கடல் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்
By DIN | Published On : 17th August 2021 01:31 AM | Last Updated : 17th August 2021 01:31 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருப்பாற்கடல் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
இங்கு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள இக்குளத்தில் ஆகாயத் தாமரைச் செடிகள் பரவிக் கிடந்தன. இது சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக ஆண்டாள் கோயில் நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற நிா்வாகம் முடிவு செய்து தற்போது அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.