அருப்புக்கோட்டையில் எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு முகாம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாகன எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
apk_photo_17_8_2021_1708chn_70_2
apk_photo_17_8_2021_1708chn_70_2
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாகன எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தென் மண்டல எரிபொருள் சிக்கன வாரிய அதிகாரி ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். அருப்புக்கோட்டை நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், போக்குவரத்து சாா்பு-ஆய்வாளா் சுடலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் லாரி, பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோருக்கு விபத்தில்லா பயணம் மேற்கொள்வது, சாலை விதிகளை மதித்தல், மாசுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் வகையில் சரியான கால இடைவெளியில் என்ஜின் ஆயில், பிரேக், ஆக்சிலேட்டா் உள்ளிட்டவற்றை முறையாகப் பராமரித்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் தனியாா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com